Thenmerkku paruvakkatru - lyrics & song

The film was named as the Best Feature Film in Tamil while Saranya Ponvannan and lyricist Vairamuthu were awarded the Best Actress and Best Lyricist prizes, respectively....

click song to download

kallikkaatil pirantha thaaye




I did not translate the song because if it is done then the true essence of the song will be lost.. So this is only for the native speakers....

                                    -----------lyrics------------

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே 
என்ன   கல்லோடச்சு  வளர்த்த  நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என்ன முள்ளு தைக்க  விடல  நீயே...






காடைக்கும்
காட்டு குருவிக்கும் 
இந்த  புதருக்குள்  இடம்  உண்டு 
கோடைக்கும் அடிக்கும்  குளிருக்கும் 
தாய் ஒதுங்கத்தான் இடம் உண்டா... 
கரட்டு மேட்டையே மாத்துனா
அவ  கல்ல  புளிஞ்சு  கஞ்சி  ஊத்துனா...
 
உளவு காட்டுல வித விதைப்பா  
ஓனா கரடுல கூழ் குடிப்பா 
ஆவாரன்  குழியிலே கை துடைப்பா  
பாவம்  அப்பா ..ooo...
வேலி முள்ளில் அவ விரகெடுப்பா   
நாழி அரிசி வச்சு ஒலை எரிப்பா 
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசிர்  வளர்ப்பா
தியாகம்  அப்பா ...
கிழக்கு விடியும் முன்ன முளிக்குரா   
அவ உலக்க பிடிச்சு தான் பிறக்குரா
மண்ண கிண்டி தான் பொழைக்கிரா 
உடல் மக்கி போகும் மட்டும் உழைக்கிறா 
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே 
என்ன   கல்லோடச்சு  வளர்த்த  நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என்ன முள்ளு தைக்க  விடல  நீயே... 



தங்கம் தனித் தங்கம் மாசு இல்லா
தாய் பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய் வழி சொந்தம் போல பாசம் இல்ல 
நேசம் இல்ல ...ooo..
தாய் கையில் என்ன மந்திரமோ 
கேபக்கழியில் ஒரு நெய் ஒழுகும்  
காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்  
அவ சமைகையிலே ...
சொந்தம் நூறு சொந்தம் இருக்குதே 
பெத்த தாய் போல ஒன்னு நிலைக்குதா 
சாமி நூறு சாமி இருக்குதே 
அட தாய் ரெண்டு தாய் இருக்குதா ....
கள்ளிக்காட்டில் பிறந்த தாயே 
என்ன   கல்லோடச்சு  வளர்த்த  நீயே 
முள்ளு  காட்டில்  மொளச்ச  தாயே 
என்ன முள்ளு தைக்க  விடல  நீயே...










0 comments:

Post a Comment

 
through my eyes